முதல் காதல், முதல் வேலை மறக்க முடியாது
A casual chat with punch king Thyrocare Founder, Velumani.

தொடக்கம்
கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு சின்ன ஊர்ல ஒரு ஏழை குடும்பத்துல பிறந்தவர்தான் டாக்டர்.வேலுமணி. எருமைமாடு வளத்து, பால் வித்து அஞ்சு பசங்களையும் post graduation பண்ணவச்சுருக்காங்க டாக்டர்.வேலுமணியோட அம்மா. அதனாலயே தைரோகேரோட வெற்றிய தன் அம்மாவோட வெற்றின்னு சொல்றாரு டாக்டர். வேலுமணி.
ஆரம்ப நாட்கள்
19 வயசுல B.Sc chemistry முடிச்சுட்டு கோயம்புத்தூர்ல வேலை தேடினப்ப, Fresherருக்கு வேலை குடுக்கமுடியாதுன்னு சொல்லியே பல இடத்துல இவருக்கு வேலை குடுக்கல. அப்போ அவர் எடுத்த சபதம்தாங்க, "நான் ஒரு முதலாளியானா கண்டிப்பா Fresherக்குதான் வேலை குடுப்பேன்". இத follow பண்ணி, இன்னிவர கிட்டத்தட்ட 15000 freshersக்கு தைரோகேர்ல வேலை குடுத்துருக்காரு.
முதல் காதல், முதல் வேலை மறக்க முடியாது
நிறைய இன்டர்வியூ, நிறைய தோல்விகள் எல்லாத்தையும் கடந்து டாக்டர்.வேலுமணிக்கு ஒரு சின்ன Capsule manufacturing கம்பெனில 1979ல 150.ரூ சம்பளத்துல வேலை கிடைச்சிருக்கு. அந்த வேலைய விட்டுட்டு வேற வேலைக்கு அவர் விடாமுயற்சியோட ட்ரை பண்ணதுனால மும்பை BRC வேலை அவருக்கு கிடைச்சது. பாஷை தெரியாத ஊருக்கு போகமாடாருன்னு நினச்சவங்க எல்லாருமே, ஆச்சர்யபடறமாதிரி அவர் BRCல 1992ல ஜாயின் பண்ணி பெருசா சாதிச்சும் காட்டிட்டாரு. BRC ல வேலைபாத்துகிட்டே PhD முடிச்சுட்டாரு.
கம்பெனி துவங்கும் எண்ணம்
எந்த வேலையானாலும் எதிர்பாராத ஒரு சறுக்கல் இருக்கும். அப்படி வேலுமணி BRCல வேலைபாக்கறப்ப, அவருக்கு அப்பறம் வேலைக்கு சேர்ந்தவங்க எல்லாரும் டைரக்டர் ஆகிட்டாங்க. தன்னோட உழைப்புக்கான முன்னேற்றம் கிடைக்கும்னு எதிர்பார்த்து அது கிடைக்காத ஏமாற்றம்தான் டாக்டர்.வேலுமணிக்கு ஒரு உத்வேகத்த உருவாக்கினது. அதுதான் நாமும் BRCஅ விட பல மடங்கு பெரிய கம்பெனிய துவங்கி அதுக்கு டைரக்டரா ஆகனுங்கற எண்ணம்.
நடக்க ஆரம்பிச்சாதான் பாதை தெரியும்
பல வருஷமா அவருக்குள்ள இருந்த டைரக்டர் ஆசையும், எதார்த்தமான அவரோட வேலையும் அவர் எதிர்பார்த்த ஸ்வாரச்யமான வாழ்க்கைய அவருக்கு குடுக்கல. அந்த காரணத்தால BRC வேலைய விட்டுட்டு பிஸ்னஸ் பண்ணலான்னு முடிவுக்கு வந்துருக்காரு. அவர் BRCல கடைசியா வேலை பாத்துட்டு இருந்த ப்ராஜக்ட்ல கிடச்ச ஐடியாதான் தைரோகேர் ஆரம்பிக்க காரணமா இருந்திருக்கு. நடக்க ஆரம்பிச்சாதான் பாதை தெரியும்னு நம்பின வேலுமணி, தன்னோட மனைவியோட சம்பாத்தியத்த வெச்சு குடும்பத்த பாத்துக்கலாம்ங்கற நம்பிக்கைல, வேலைய விட்டுட்டு தன்னோட இலக்க நோக்கி நடக்க ஆரம்பிச்சுருக்காரு.
வாழ்க்கை துணையோட ஒத்துழைப்பு
இவரோட பிஸ்னஸ் ப்ளேனையும், வேலைய விட்ட விஷயத்தையும் கேட்ட அவரோட மனைவி, "நிச்சயமா நீங்க சாதிப்பீங்க. ஆனா நான் இல்லாம உங்களால எதுவும் செய்ய முடியாது"ன்னு சொல்லி அவங்க வேலையயும் விட்டுட்டு வேலுமணிக்கு உதவியா இருந்துருக்காங்க. "வாழ்க்கை துணையோட ஒத்துழைப்பும், அவங்க நம்மமேல வச்சிருக்கற நம்பிக்கையும்தான் நம்மள சாதிக்க வைக்கும்"னு ரொம்பவே நம்பிக்கையா சொல்றாரு டாக்டர். வேலுமணி. அதுமட்டுமில்லாம, அவர் எந்த விஷயத்த எப்படி செய்யனும்னு சொன்னா போதுமாம், அது அப்படித்தான் நடக்குதான்னு முழு மூச்சோட கவனிக்கறதுதான் அவர் மனைவியோட வேலையா இருக்கும்னு சொல்றாரு.
தைரோகேர் தொடக்கம்
டாக்டர்.வேலுமணி ஆரம்பத்துல தன் சேவிங்கஸ்ல இருந்த 2லட்சம் ரூபாய வச்சு, ஒரு சின்ன இடத்த வாடகைக்கு எடுத்து, ஒரே ஒரு பரிசோதனை மிஷின் வாங்கி, ஒரு வேலையாள்கூட இல்லாம சுயமா ஆரம்பிச்சதுதான் தைரோகேர். ஆரம்பத்துலயும் சரி, தைரோகேர் பெரிய அளவுல வளர்ந்து வந்த எந்த சூழ்நிலைலயும் டாக்டர்.வேலுமணி கடன் வாங்கினதே இல்லையாம். வரவை பெறுக்கி, செலவை குறைச்சு வாழ்ந்ததுதான் கடன் வாங்காம முன்னேறினதுக்கு காரணம்னு சொல்றாரு.
அவரது inspiration
தைரோகேர் எப்படி ஆரம்பிக்கனும்னு அவருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது கோவை அன்னபூர்ணா ஹோட்டல்தான். அவங்க 1980லயே cloud kitchen நடத்திட்டு இருந்தாங்காளாம். அந்த விஷயத்த பின்பற்றி ஹோட்டல் ஸ்டைல் லேப் உருவாக்கி சவுத் மும்பைல சென்ட்ரல் லேப் செட் பண்ணி, தானே முதல் போட்டு franchise பண்ண ஆரம்பிச்சுருகாரு. அப்படி மும்பைல பிரபலமான தைரோகேருக்கு இன்னைக்கு நாடு முழுக்க 5000க்கும் மேலான branches இருக்கு.
இழக்க துணிந்துவிட்டால், நீ வெற்றிபெறுவதை தவிர்க்க முடியாது
ஆரம்பகாலத்துல அவர் பண்ண விடாமுயற்சி , ரொம்பவே சிம்பிளான work menu, 24 மணிநேர கடின உழைப்பு, இது எல்லாம்தான் இந்த மகத்தான வெற்றிக்கு காரணம்னு சொல்றாரு டாக்டர்.வேலுமணி. "இழக்க துணிந்துவிட்டால், நீ வெற்றிபெறுவதை தவிர்க்க முடியாது". "இழப்போம் என்று நினைத்தால் நீ வெற்றியை அடையமுடியாது" ன்னு ஊக்கம் தர அவரோட வார்த்தைகள்ளயே அவரோட வெற்றி பயணத்த அவர் எப்படி ரசிச்சு உருவாக்கினாருன்னு உணர முடியுது.
Pharmeasyகூட டீல்
2016 வது வருஷம் தைரோகேர் IPOல லிஸ்ட் ஆனதுக்கு அப்பறமா, மூனு வருஷம் ஷேர் ரேட் ரொம்பவே குறைவா இருந்துருக்கு. ஆனா கோரோனா காலத்துல 400ரூபாயா இருந்த ஒரு ஷேர், 1300ரூபாயா உயர்ந்தது. அந்த நிலைலதான் தைரோகேர்ல இருந்து retired ஆகலாம்னு வேலுமணி அவர்கள் தீர்மானம் பண்ணிருக்காரு. அப்படி மே 25 அன்னிக்கு 15நிமிஷம் நடக்க இருந்த Buyer meeting 3 மணிநேர மீட்டிங்கா நடக்க, அதுல ஃபைனல் பண்ணி ஜீன் 25 தேதிக்குள்ள Pharmeasyகூட டீல் சைன் பண்ணி, தன்னோட ரிடையர்மெனட்ட declare பண்ணினாரு டாக்டர்.வேலுமணி.
நேரம் மட்டும்தான் நிரந்தரம்
"நேரம் மட்டும்தான் நிரந்தரம் அதை நல்லா பயன்படுத்தி, தன்னோட சொந்த உழைப்புல முன்னுக்கு வரணும்னு நினைக்கற யாராலையும் சாதிக்க முடியும்." ன்னு உறுதியா சொல்றாரு டாக்டர்.வேலுமணி. அதுமட்டுமில்ல இந்த காலத்து இளைஞர்களுக்கு நிறையவே explore பண்ண வாய்ப்பு இருக்கு. அந்த வாய்ப்ப பயன்படுத்தி, தொழில நல்லா கத்துகிட்டு, 35வயதுல தொழில் துவங்கினா நிச்சயம் வெற்றி பெறலாம்னு சொல்றாரு.
முக்கியமான வேலை எதுன்னு பார்த்து, ஆர்டரா முடிக்கணும்
ஒவ்வொரு வாரமும், கண்டிப்பா செஞ்சு முடிக்க வேண்டிய முக்கியமான 5 விஷயம் என்னென்னனு descending ஆர்டர்ல நோட் பண்ணி வெச்சுட்டு, ரொம்ப முக்கியமான முதல் வேலைய முதல்ல செஞ்சு முடிக்கனும். எல்லா விஷயத்தையும் செஞ்சு முடிக்கனுன்னு நினைச்சா கண்டிப்பா ஒரு விஷயம்கூட முழுசா செய்ய முடியாது. அதனால இருக்கர வேலைகள்ள முக்கியமான வேலை எதுன்னு பார்த்து, ஆர்டரா முடிச்சா, சீக்கிரமே வெற்றி அடையலாம். இதை எல்லா தொழில்முனைவோரும் செய்யனும்னு சொல்றாரு. டாக்டர்.வேலுமணி.
வாழ்க்கை தத்துவம்
The Trust, the Truth" இதுதான் தைரோகேரோட tagline. எங்க உண்மை, நம்பிக்கை, வெளிப்படை தன்மை இது முனும் இருக்கோ அங்க நிச்சயம் வெற்றி இருக்கும்ங்கறதுதான் டாக்டர்.வேலுமணி அவர்களோட வாழ்க்கை தத்துவமும்கூட.